நாட்டில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு!

72

நாட்டில் மேலும் 677 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 594,996 அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 16 நேற்று கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,190 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,700 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் அச்சுறுத்தல் நிலையே உள்ளது! விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை