வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா!

137

வவுனியா, செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ் விபத்தில், முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவன் பயணித்த மோட்டார்சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

இச் சிறுவனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அச் சிறுவனுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.