இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா! தற்போதைய நிலவரம்

124

இந்தியாவில் நேற்று (14) ஒரேநாளில் மட்டும் 10 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இவர்களில் 3 கோடியே 38 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 125 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: