கொரோன நிவாரணம் – கம்பகாவில் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

119

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கம்பகா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

மினுவாங்கொடை – திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளது.

400 மில்லியன் ரூபா நிதி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.