கொழும்பில் வேகமாக பரவும் கொரோனா உப திரிபு! – மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

BA-5 என்ற கொரோனா உப திரிபானது, கொழும்பில் வேகமாக பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேலும் சில கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

குறித்த வைரஸ் தொடர்பான புதிய தகவல்களை அதன் பின்னர் கண்டறிய முடியும் என விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை