கிளிநொச்சியை மிரட்டும் கொரோனா; இன்று மட்டும் இத்தனை பேருக்கு தொற்று உறுதியா?

72

கிளிநொச்சியில் கொரோனா தீவிரமாக சமூக்தில் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுவரும் சூழலில் இன்று காலை வெளியாகிய கொவிட் பரிசோதனை முடிவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில்24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 22 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியுாகத்தர்களிற்குமாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: