நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்னுக்கு மிதமான அறிகுறிகளுடன் கூடிய தொற்று இருப்பதாகவும், இவர் வரும் மே 21ஆம் தேதி வரை தனிமையில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாலை ஜெசிந்தாவுக்கு கோவிட் அறிகுறிகள் தென்படவேஇ இன்று காலை அவருக்கு ரேபிட் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் ஜெசிந்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் ஜெசிந்தாவின் கணவர் கிளார்க் கேபோர்டுக்கு கடந்த மே 8ஆம் தேதி கோவிட் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஜெசிந்தாவும் தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறார்.
வீட்டிலிருந்தபடியே இவர் அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் மே 21ஆம் தேதி வரை இதை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.