சக்தியை மீறிய செலவு; செல்லமாக வளர்க்கப்பட்ட பன்றியால் கதறும் பெண்மணி

204

செல்லமாக வளர்க்கப்பட்ட பன்றியின் உணவிற்காக, தன் சக்தியை மீறி அன்றாடம் செலவு செய்யப்படுவதாக  அதன் உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ள சம்பவம், பிரேசிலில் இடம்பெறுள்ளது.

பிரேசிலில் 250 கிலோ எடையுள்ள பன்றியை பெண்மணி ஒருவர் செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார்.

இப்போது 3 வயதாகியுள்ள லிலிகா என பெயரிடப்பட்டுள்ள அந்த பன்றி, ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனியை உண்பதாக அதை வளர்க்கும் Rosangela தெரிவித்துள்ளார்.

சிறிய வகை பன்றி என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதை விற்பனை செய்ய தயாராக இல்லை என Rosangela தெரிவித்துள்ளார்.