தேங்காய் திருடியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!

133

தேங்காய் விலை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தேங்காய் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் குற்றவாளியான நபரை, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்சம்பவம் கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய – நீலமஹர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.

அத்தோடு குறித்த இடத்திலுள்ள காணி ஒன்றில் அத்துமீறி நுழைந்து தேங்காய் ஒன்றை திருடியமை தொடர்பில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, நாளாந்த உணவு தேவைக்காக குறித்த தேங்காயை திருடியதாக சந்தேகநபர் மன்றில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: