• Apr 20 2024

ஶ்ரீரங்காவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 5:33 pm
image

Advertisement

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சிஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக வவுனியா மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா

செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த  வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ரங்காவின் மெய்ப்பாதுகாவலராக செயற்ப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.


இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், ரங்கா உட்பட  குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவர் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைக்காக ஶ்ரீரங்கா ஆஜராகாமை ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு அவரை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.


எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ஶ்ரீரங்கா உடல்நலகுறைவு காரணமாக கொழும்பில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீரங்காவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு SamugamMedia முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சிஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக வவுனியா மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியாசெட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த  வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ரங்காவின் மெய்ப்பாதுகாவலராக செயற்ப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், ரங்கா உட்பட  குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவர் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைக்காக ஶ்ரீரங்கா ஆஜராகாமை ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு அவரை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ஶ்ரீரங்கா உடல்நலகுறைவு காரணமாக கொழும்பில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement