மூன்று தேங்காய்களை களவாடிய இருவருக்கு நீதிமன்று வழங்கிய தீர்ப்பு!

297

காலி வெக்குனுகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக மூன்று தேங்காய் பறித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து மூன்று தேங்காய்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த கைதான இருவரில் ஒருவர் சிறுவர் என தெரியவருகிறது.

குறித்த காணியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராவில் சட்டவிரோதமாக தேங்காய் பறிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும், தலா இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அராலியில் மோட்டார் திருட்டு: சந்தேக நபரை தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலைவீச்சு…!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: