கொரோனாவுடன் தப்பி ஓடிய இளம் பெண் நடு வீதியில்! தொடரும் அவலங்கள்!!

385

இலங்கையில் கொரோனா நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்லதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் (19) தப்பிச் சென்ற 25 வயதான குறித்த பெண் எஹெலியகொடவில் உள்ள சிதுரங்கலாவில் இன்று (21) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை வயதுடைய குழந்தையின் தாயாரான இவர், நோய் குறித்த பயத்தினாலேயே இவ்வாறு தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.