கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த சி.எஸ்.கே அணி..!

545

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது டோனி தலைமையிலான சி.எஸ்.கே. எனப்படும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

2021 ஐ.பி.எல். ரி- 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்போட்டியில் மஹேந்திரசிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் – இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அந்த அணி – ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் கண்ட ருத்துராஜ் கெய்ட்வாட், டு ப்ளஸி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

ருத்துராஜ் 27 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் சுணில் நரேனின் பந்து வீச்சில் சிவன் மாவியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டு ப்ளஸியுடன் சிறப்பான இணைப்பாட்டத்தை அதிரடியாக வெளிப்படுத்திய ரொபின் உத்தப்பா வெறும் 15 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சுணில் ரரேனின் சுழலில் சிக்கி பெவிலியன் திருப்பினார்.

அடுத்துவந்த மொயின் அலி வழக்கமான அதிரடியுடன் பந்துகளைப் பறக்கவிட்டார்.

இந்நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு சி.எஸ்.கே. அணி, 192 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் கண்ட டு ப்ளஸி இறுதிவரை நிலைத்து களத்தில் நின்று இறுதிப்பந்தில் சிவன் மாவி பந்துவீச்சில் வெங்கடேஸ் ஐயரிடம் பிடிகொடுத்து 59 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மொயின் அலி 20 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார்.

பள்ளிவாசலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் பலி..!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: