அகதியாக தமிழகம் சென்று மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர்களின் தற்போதைய நிலை!

தமிழகம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் மணல் திட்டில் மயங்கிய  நிலையில் காணப்பட்ட இரண்டு இலங்கை அகதிகளை மீட்டுச் செல்ல  முடியாமல் மூன்று மணி நேரமாக தமிழகப்  பொலீசார் பரிதவித்தனர்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடி அருகேயுள்ள  கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் கடற்கரை மணல் திட்டில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் உட்பட இரண்டு அகதிகள் மயக்க நிலையில் கிடப்பதாக மீனவர்கள் தமிழக பொலிசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு சென்ற மரைன் பொலிசார் மயக்க நிலையில் இருந்த இரண்டு முதியவர்களையும் மீட்டு அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். இதில் இருவரும் மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதி கொல்லர் ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் (82), திரிகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (71) என ஆவணங்கள் மூலம்  தெரியவந்தது.

இருவரும் ஞாயிறு இரவு  தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் ஏற்றிச் செல்லப்பட்டு கோதண்டர்ராமர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் இறக்கி விட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்மிற்குச் சென்ற பொலிசார் இருவரையும் நோயாளர் காவு வண்டியில் மீட்க முயற்சித்தபோதும் அது அதிக மணல் பகுதி என்பதனால் முடியாமல் போனது. இதனால்  மண்டபத்தில் இருந்து ஹோவர் கிராப்ட் கப்பல் வருவதற்கு இந்திய கடலோர காவல் படைக்கு பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

மூன்று மணி நேரம் தாமித்தே  ஹோவர்கிராப்ட் அந்த இடத்துற்கு வருகை தந்துள்ளது.  அதன் பின்னர்  இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போதுm மயக்க நிலையில் மிகவும் சோர்வாக இருந்ததால் இருவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க  பொலிசார் முயன்றனர்.

ஆனால் இருவராலும் தண்ணீர்கூட அருந்தமுடியாத அளவிற்கு மயக்க நிலையிலேயே இருந்தனர். வயதான பெண்ணின் நெற்றியில் அடிபட்ட காயம் இருந்தது. இருவரையும் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பொலிசார் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இருவரில் ஒருவருக்கு இன்னும் மயங்கம் தெளியவில்லை என தெரியவருகின்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை