புகையிரத சேவைகள் குறித்து தற்போது வெளியான தகவல்!

புகையிரத சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை