ஆஸ்திரேலியாவில் இணைய தாக்குதல் : பாவனையாளர்கள் பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் அண்மையில் இணையவழி தகவல் திரட்டு தாக்குதல் ஒன்றின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்களது தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏறத்தாழ 10 மில்லியன் மக்களின் பெயர், முகவரி, பிறந்த திகதி, மின்னஞ்சல் முகவரிகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள், வீட்டு முகவரிகள் உட்பட பல முக்கிய தனிப்பட்ட தகவல்கள் சட்டரீதியற்ற நபர்களின் கைக்கு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவின் பிரபல டெலிகொம் தொலைதொடர்பு நிறுவனமான ஒப்டிஸ் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பெடரல் போலீஸ் மிக கவனமாக முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தாக்குதல்கள் இனங்காணப்பட்ட மிகக் குறுகிய நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால் மக்களது வங்கி பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் கசிந்து இருக்க வாய்ப்பில்லை என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

குறித்த, இந்த தாக்குதலை மேற் கொண்டவர்கள் யாராவது ஒரு குற்றவியல் அமைப்புக்கு அல்லது வேறு நாடுகளினால் பின்னணி ஆதரவு வழங்கப்படும் குழுவாக இருக்க வேண்டும் என நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை