முட்டைகளை பிரிட்ஜில் வைப்பது கடும் ஆபத்தான செயல் என்று தெரியுமா?

251

கோழி முட்டைகளை குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைத்திருப்பது ஆபத்தான செயல் என ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

மனிதர்களுக்கு பல வயிற்று உபாதைகளை உண்டுபண்ணக்கூடிய தன்மை இந்த குளிர்சாதனப்பெட்டி முட்டைகளுக்கு இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கும்போது அங்குள்ள குளிர்ச்சியான தன்மை சில ஆபத்தான பக்டீரியாக்களை முட்டை ஓட்டில் வளர்ச்சியடையச் செய்வதுடன் அந்த பக்டீரியாக்கள் ஓட்டை ஊடறுத்து முட்டைக் கருவுடன் சேரக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்தபின்னர் அந்த முட்டையை வெளியில் எடுத்து வைக்கின்றபோது அது வேகமாக அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

முட்டைகளை சாதாரண வெப்ப நிலையில் வைத்து குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் பயன்படுத்துவதே ஆரோக்கியமானதாகும்.