• Mar 29 2024

இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia

Chithra / Apr 18th 2023, 5:29 pm
image

Advertisement

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் வேலை செய்யவும், நீரை அதிகமாக பருகவும், திரவ உணவுகளை அதிகமாக எடுக்கவும் வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது.இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் வேலை செய்யவும், நீரை அதிகமாக பருகவும், திரவ உணவுகளை அதிகமாக எடுக்கவும் வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement