மஹிந்தவின் நாய்க்குட்டியை திருடிய ஐ.தே.க உறுப்பினரின் மகள் கைது

வீரகெட்டியவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்திருந்தனர்.

இதன் போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டி காணாமல் போயிருந்தது.

அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது வீட்டின் முன் நாய்க்குட்டி நின்றதாக கூறி, கார்ல்டன் தோட்டத்தில் நாய்க்குட்டியை மீள விட முயன்ற சமயத்திலேயே யுவதி கைதானார்.

வீரகெட்டிய பிரதேசசபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஒருவரின் மகளே கைதானார்.

திருடப்பட்ட நாய் அவரது பராமரிப்பில் இருந்த நிலையில், திருடப்பட்டவற்றை மீள ஒப்படைக்குமாறு பொலிசார் விடுத்த அறிவித்தலின் பிரகாரம், நாயை மீள கார்ல்டன் தோட்டத்தில் விட யுவதி முயன்றிருக்கலாமென கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை