• Apr 19 2024

பிரித்தானியாவில் கொடிய பக்டீரியா தொற்றுக்கு - பலியாகும் சிறுவர்கள்

harsha / Dec 4th 2022, 11:32 pm
image

Advertisement

பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த தொற்று  கண்டறியப்பட்டுள்ளதுடன் 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நான்கு வயது சிறுவனொருவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பான UKHSA  உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் Strep A பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்துள்ளமையையும் உறுதி செய்துள்ளனர்.

 மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை இந்த நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பக்டீரியா Strep A தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிகிச்சை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நான்கு அல்லது ஐந்து நாட்களாக காய்ச்சல் விடாமல் நீடித்தால், அல்லது வேகமாக மூச்சு வாங்கினால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் கொடிய பக்டீரியா தொற்றுக்கு - பலியாகும் சிறுவர்கள் பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த தொற்று  கண்டறியப்பட்டுள்ளதுடன் 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, நான்கு வயது சிறுவனொருவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பான UKHSA  உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் Strep A பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்துள்ளமையையும் உறுதி செய்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை இந்த நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். பக்டீரியா Strep A தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிகிச்சை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நான்கு அல்லது ஐந்து நாட்களாக காய்ச்சல் விடாமல் நீடித்தால், அல்லது வேகமாக மூச்சு வாங்கினால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement