கோமகன் மற்றும் நடிகர் பாண்டுவை தொடர்ந்து பிரபல நடிகை கொரோனாவால் மரணம்!

684

கொரோனா நோய் தொற்று காரணமாக நேற்று வியாழக்கிழமை தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலங்களின் மரண செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலை பாடிய பாடகர் கோமகன் மற்றும் குணசித்திர நடிகர் பாண்டு இருவரும் கொரோனாவால் காலமானார்கள். இப்போது பிரபல நடிகையின் மரண செய்தி ரசிகர்களை மேலும் சோகத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீபதா அவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பழம்பெறும் நடிகர்களான தர்மேந்திரா, கோவிந்தா, ராஜ் பாப்பர் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை ஸ்ரீபதா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது இறந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: