ரஜினியுடன் மீண்டும் இணையும் தீபிகா படுகோன்

195

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து நடிகர் ரஜினியின் 169 ஆவது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtube.com/watch?v=Q7qmnGCZyPY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: