இலங்கையின் பெயரை ‘சிங்களே’ என மாற்றக் கோரிக்கை!வெடித்தது புதிய சர்ச்சை

547

இலங்கையை முழுமையான பௌத்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்களும், அரசின் செயற்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன.

நாளுக்கு நாள் பௌத்த பேரினவாதத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், பௌத்த பிக்குகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, இலங்கையின் பெயரை சிங்களே என மாற்ற வேண்டுமேன பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பௌத்த பிக்குகள் இன்றைய தினம் தங்களது பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த பரிந்துரைகளில் நாட்டின் பெயர் சிங்களே என பெயரிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ ரோஹன தரப்பைச் சேர்ந்த அனுநாயக்க ஒரே கஸ்யப தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வரலாற்று காலம் போன்று நாடு மூன்று இராசதாணிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: