• Sep 29 2024

அடர்ந்த காடு: உயிரிழந்த எஜமானர் – கடும் குளிரில் 72 நாள்கள் உடலை பாதுகாத்த நாய்! samugammedia

Tamil nila / Nov 20th 2023, 10:17 am
image

Advertisement

அமெரிக்காவில் நாய் ஒன்று உரிமையாளரின் உடலை 10 வாரமாக  பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கொலராடோவைச் சேர்ந்தவர் ரிச் மூர்(71). அங்குள்ள மலைப் பகுதியில் உள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு வளர்த்த ஃபின்னி என்ற நாயுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். அதில் மலை ஏறுகையில் கடும் குளிரால் ரிச் உயிரிழந்துள்ளார்.

குறித்த  அந்த நாய் இறந்துப்போன தனது உரிமையாளரின் அருகிலேயே 72 நாள்களாக தங்கி இருந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் உடலை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்போது, ஃபின்னி எடைக் குறைந்து அதன் எலும்புகள் எல்லாம் தெரிகிற அளவிற்கு மோசமான நிலையில் இருந்துள்ளது. உடனே அதனை மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாக ரிச் மூரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  ஃபின்னி 72 நாள்கள் கடும் குளிரைத் தாக்குப் பிடித்துகொண்டு உயிருடன் இருந்தது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடர்ந்த காடு: உயிரிழந்த எஜமானர் – கடும் குளிரில் 72 நாள்கள் உடலை பாதுகாத்த நாய் samugammedia அமெரிக்காவில் நாய் ஒன்று உரிமையாளரின் உடலை 10 வாரமாக  பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கொலராடோவைச் சேர்ந்தவர் ரிச் மூர்(71). அங்குள்ள மலைப் பகுதியில் உள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு வளர்த்த ஃபின்னி என்ற நாயுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். அதில் மலை ஏறுகையில் கடும் குளிரால் ரிச் உயிரிழந்துள்ளார்.குறித்த  அந்த நாய் இறந்துப்போன தனது உரிமையாளரின் அருகிலேயே 72 நாள்களாக தங்கி இருந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் உடலை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர்.அப்போது, ஃபின்னி எடைக் குறைந்து அதன் எலும்புகள் எல்லாம் தெரிகிற அளவிற்கு மோசமான நிலையில் இருந்துள்ளது. உடனே அதனை மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாக ரிச் மூரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்  ஃபின்னி 72 நாள்கள் கடும் குளிரைத் தாக்குப் பிடித்துகொண்டு உயிருடன் இருந்தது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement