நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை கடந்த சில வாரத்திற்கு முன்பு பாராளுமன்றில் பிரதிசபாநாயகர் தெரிவு இடம்பெற்று ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மறுதினமே பிரதிசபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்திருந்த நிலையில் மீண்டும் பிரதிசபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றில் பிரதிசபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஆளும் தரப்பான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.