தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்றிரவு நாட்டிற்கு பயணம்

162

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இந்திய மீனவர்களில் 18பேர் இன்று இரவு இந்தியாவிற்கு  பயணமாகவுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பிற்குள்  இரு படகுகளில் ஊடுருவிய 23 இந்திய மீனவர்களையும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுவித்த நீதிமன்றம் அவர்களது படகுகளை அரச உடமையாக்கியது. 

இதன் அடிப்படையில் வெளிவந்த 23 இந்திய மீனவர்களும் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில், அதில் மூவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. 

இதனால் எஞ்சிய 20 பேரையும் இன்று தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 

விமானச் சிட்டை எடுப்பதற்காக நேற்றைய தினம் மே ற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

இதனால் தற்போது 18 பேர் மட்டும் இன்று நள்ளிரவு 11.50ற்கு புறப்பட்டு அதிகாலை விமானத்தில் சென்னை செல்லவுள்ளனர்.

இவ்வாறு செல்வோர் நாளை காலை அவர்களது வீடுகளிற்கு சென்றடைவர் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் கொரோனாத் தொற்றிற்கு இலக்கான ஐவரும் குணமடைந்த பின்னர தாயகம் அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: