• Apr 23 2024

'கொய்யா டீ' குடிச்சா சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாமாம் தெரியுமா?

Chithra / Dec 4th 2022, 9:07 pm
image

Advertisement

குளிர்காலம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த பருவத்திற்கு ஏற்ப உடலில் பல நோய்களும், மாறுபாடுகளும் நிகழும். பொதுவாக குளிர்காலத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், காய்ச்சல், சளி இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

மேலும், குளிர்காலம் உங்களை சோம்பேறி ஆக்குவதால், உங்களின் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இது உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆதலால், சில புதிய பருவகால பழங்களை உண்ணும் நேரம் இது. சில குளிர்கால பழங்கள் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

இந்த குளிர்கால பழங்களைப் போலவே, இந்த தாவரத்தின் இலைகளிலும் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா இலைகள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளன.

கொய்யா மற்றும் அதன் இலைகள் ஏன்?


இந்தியில் அம்ரூட் என்றும் அழைக்கப்படும் கொய்யா, லைகோபீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இனிப்புப் பழமாகும். அதுமட்டுமின்றி, இந்த பழத்தில் சுமார் 80% நீர்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் கொய்யாவின் இலைகள் பழத்தை விட ஆரோக்கியமானது. இந்த இலையை நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பருவகால சளி மற்றும் காய்ச்சல்


பொதுவான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொய்யா இலைகள் நீண்ட காலமாக வீட்டு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது சளி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாச பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் கொய்யா இலைகளுடன் ஒரு சூடான தேநீர் குடிப்பதே உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது


கொய்யா இலைகள் இன்சுலின் ஏற்றத்தாழ்வை மேம்படுத்தவும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். உண்மையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கொய்யா இலை நீர் அல்லது தேநீர் குடிப்பது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதற்கு உதவும் என்று கூறுகிறார்கள். ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொய்யா இலை செரிமான அமைப்பில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் நொதிகளை வெளியிட உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது.

தோல் மற்றும் முடி பராமரிப்பு


தோல் மற்றும் முடி பராமரிப்பு முறைக்கு கொய்யா இலை தேநீர் அல்லது தண்ணீர் சேர்ப்பது முக தசைகளை இறுக்குவதற்கு உதவுகிறது மற்றும் இந்த கலவையுடன் முடியைக் கழுவுவது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

எடை இழப்புக்கு உதவுகிறது


கொய்யா இலை தேநீர் பருகுவது உடல் எடையை குறைக்க உதவும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் விரைவான எடை இழப்புக்கு உதவும். அதனால், எடை இழப்பு திட்டத்தில் உள்ளவர்கள் உங்கள் தினசரி பழக்கத்தில் கொய்யா இலை தேநீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கொய்யா டீ தயாரிப்பது எப்படி?

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த தேநீரை தயாரிக்க, ஒரு கடாயை எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கொய்யா இலைகள் மற்றும் ½ தேக்கரண்டி இஞ்சி (விரும்பினால்) துருவி போடவும். நன்றாக கொதிக்க வைத்து இந்த தேநீரை வடிகட்டவும். சுவைக்கு தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

'கொய்யா டீ' குடிச்சா சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாமாம் தெரியுமா குளிர்காலம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த பருவத்திற்கு ஏற்ப உடலில் பல நோய்களும், மாறுபாடுகளும் நிகழும். பொதுவாக குளிர்காலத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், காய்ச்சல், சளி இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், குளிர்காலம் உங்களை சோம்பேறி ஆக்குவதால், உங்களின் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இது உங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆதலால், சில புதிய பருவகால பழங்களை உண்ணும் நேரம் இது. சில குளிர்கால பழங்கள் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.இந்த குளிர்கால பழங்களைப் போலவே, இந்த தாவரத்தின் இலைகளிலும் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா இலைகள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளன.கொய்யா மற்றும் அதன் இலைகள் ஏன்இந்தியில் அம்ரூட் என்றும் அழைக்கப்படும் கொய்யா, லைகோபீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இனிப்புப் பழமாகும். அதுமட்டுமின்றி, இந்த பழத்தில் சுமார் 80% நீர்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் கொய்யாவின் இலைகள் பழத்தை விட ஆரோக்கியமானது. இந்த இலையை நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.பருவகால சளி மற்றும் காய்ச்சல்பொதுவான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொய்யா இலைகள் நீண்ட காலமாக வீட்டு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது சளி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாச பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் கொய்யா இலைகளுடன் ஒரு சூடான தேநீர் குடிப்பதே உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி.சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதுகொய்யா இலைகள் இன்சுலின் ஏற்றத்தாழ்வை மேம்படுத்தவும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். உண்மையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கொய்யா இலை நீர் அல்லது தேநீர் குடிப்பது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதற்கு உதவும் என்று கூறுகிறார்கள். ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொய்யா இலை செரிமான அமைப்பில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் நொதிகளை வெளியிட உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது.தோல் மற்றும் முடி பராமரிப்புதோல் மற்றும் முடி பராமரிப்பு முறைக்கு கொய்யா இலை தேநீர் அல்லது தண்ணீர் சேர்ப்பது முக தசைகளை இறுக்குவதற்கு உதவுகிறது மற்றும் இந்த கலவையுடன் முடியைக் கழுவுவது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.எடை இழப்புக்கு உதவுகிறதுகொய்யா இலை தேநீர் பருகுவது உடல் எடையை குறைக்க உதவும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் விரைவான எடை இழப்புக்கு உதவும். அதனால், எடை இழப்பு திட்டத்தில் உள்ளவர்கள் உங்கள் தினசரி பழக்கத்தில் கொய்யா இலை தேநீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.கொய்யா டீ தயாரிப்பது எப்படிபல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த தேநீரை தயாரிக்க, ஒரு கடாயை எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கொய்யா இலைகள் மற்றும் ½ தேக்கரண்டி இஞ்சி (விரும்பினால்) துருவி போடவும். நன்றாக கொதிக்க வைத்து இந்த தேநீரை வடிகட்டவும். சுவைக்கு தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Advertisement

Advertisement

Advertisement