டிஜிட்டல் தடுப்பூசியும் அதன் பயன்பாடுகளும்..!

மூளையில் சில தேவையான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதன் மூலம், மனிதரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நோயை தடுக்கும் வகையிலான டிஜிட்டல் வேக்சின் எனப்படுபவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடலில் நேரடியாக மருந்தை செலுத்தி நோயை தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தெரிந்தவை.

ஆனால் மருந்துகள் ஏதும் இல்லாமல் உடலில் இருக்கும் நோயை கண்டறிந்து அவற்றை குணப்படுவதுதான் டிஜிட்டல் வேக்சின்.

அமெரிக்க வாழ் தமிழர் பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் 12 ஆண்டுகள் இதற்காக உழைத்து, டிஜிட்டல் வாக்சினுக்கான காப்புரிமையை அமெரிக்கா காப்புரிமை சங்கத்திடமிருந்து பெற்றுள்ளார்.

மேலும், Fooya எனும் கேமிங் ஆப் தரவிறக்கம் செய்து, அதில் விளையாடும் போது குழந்தைகளின் நிஜ வாழ்வில் உணவுப் பழக்கம் குறித்த நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மெடாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும்.

குழந்தை அந்த ஆப்பில் விளையாடும் போது தேர்ந்தெடுக்கும் உணவுகளுக்கு ஏற்ப அதில் விளைவுகள் ஏற்படும்.

இதை தொடர்ந்து விளையாடும் போது குழந்தையின் நிஜ வாழ்க்கையில் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவதாக பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குழந்தைகளிடையே சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது.

எனவே குழந்தைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வகையிலான உணவு பழக்கங்களை உருவாக்க Fooya ஆப் உதவும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை