பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இனங்காணப்பட்ட காணிகள் அரச அதிகாரிகளால் தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் வன்னி பிரதேசத்தில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
மாவட்ட ரீதியில் உள்ள அரச அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுகின்றனர். பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் காணிகளை கையகப்படுத்த்தக்கூடிய நிலைமை எமது மாவட்டங்களில் காணப்படுகின்றன.
வவுனியா ஒலுமடு, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
தனியாருக்காக அரசாங்க காணிகள் சுவீகரிப்பு.அரச அதிகாரிகள் மீது திலீபன் எம்.பி குற்றச்சாட்டு.samugammedia பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இனங்காணப்பட்ட காணிகள் அரச அதிகாரிகளால் தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் வன்னி பிரதேசத்தில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.மாவட்ட ரீதியில் உள்ள அரச அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுகின்றனர். பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் காணிகளை கையகப்படுத்த்தக்கூடிய நிலைமை எமது மாவட்டங்களில் காணப்படுகின்றன.வவுனியா ஒலுமடு, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.