• Apr 20 2024

கடும் குளிர் கால நிலை தொடர்பில், கால் நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் அறிக்கை!

Tamil nila / Dec 19th 2022, 10:11 am
image

Advertisement

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கடும் குளிர் கால நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன.திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களில் பன்னை வளர்ப்பாளர்களின் ஆடு,மாடு இறந்துள்ளதால்   கால் நடை வளர்ப்பாளர்கள் பல நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். 


இது தொடர்பில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.ஏ.மொஹமட் பாஸி உடனான நேர்காணல் பின்வருமாறு



"கால் நடைகளின் இறப்புக்கு குளிரின் அதிர்ச்சியே காரணம் "பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியீடு


01.கிழக்கு மாகாணத்தில் அண்மையில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன இது தொடர்பில் இறப்பிற்கான காரணங்கள் என்ன??


கடந்த 8ம் திகதி ஏற்பட்ட கடும் குளிருடனான கால நிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியினால் கிழக்கு மாகாணத்தில் 30 பாகை வெப்ப நிலை இருந்த போது அது ஆறு மணியாகும் போது  படிப்படியாக 20 பாகையாக குறைந்தமையினால் இரவு 11 மணிக்கு பிற்பாடு 17 ஆக குறைவாகியது இதன் தாக்கம் கால் நடைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .


 தற்போதைய நிலையில் பண்ணையாளர்கள் மாடுகளை காடுகளில் திறந்தவெளியில் வளர்த்து வந்தார்கள் ஏன் எனில் வேளாண்மை, பயிர்ச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் திறந்த வெளியில் வைத்தே பராமரித்தார்கள் இதனால் திடீர் குளிருடன் நிலவிய காலநிலை ஏற்பட்டு கால் நடைகளான பசு மாடுகள்,எருமை மாடுகள்,ஆடுகள் என  பல இறந்துள்ளன.


இதன்படி கிழக்கு மாகாணத்தை  பொறுத்தமட்டில் திறந்த வெளியில் மாடுகளை வளர்த்து வந்த கால் நடை வளர்ப்பாளர்கள் கடும் குளிரின் தாக்கம்  காரணமாக மாடுகள் இறந்திருக்கலாம் என உடனடியாக தீர்மானிக்காமல் எமது கால் நடை உற்பத்தி திணைக்கள புலனாய்வாளர்களை அழைத்து பிரேத பரிசோதனையின் அறிக்கைக்காக அதன் மாதிரிகளை  பேராதெனிய கால் நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது .


குறித்த அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றிருக்கிறது அதில் "கடும் குளிரின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் " கால் நடைகளின் இறப்புக்கு காரணமாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மாடுகளை திறந்து வெளியில் இன்றி உள்ளக வளர்ப்பு முறைகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய உத்திகளை கையாண்டு அதனை பாதுகாக்க முடியும்.



2.கிழக்கில் கால் நடை இறப்புக்களின் தொகையை மாவட்ட அடிப்படையில் எடுத்துக் கூற முடியுமா??


கால் நடை இறப்பு தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் 425 பசு மாடுகளும்,36 எருமை மாடுகள்,71 ஆடுகள் இறந்துள்ளன. இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 252 பசு மாடுகளும் 19 எருமை மாடுகளும் 38 ஆடுகளும் இறந்துள்ளன, அம்பாறை மாவட்டத்தில் குறைவான இறப்புக்களே ஏற்பட்டுள்ளன 9பசு மாடுகளும், 3 எருமை மாடுகளும் 5 ஆடுகளுமாக இறந்துள்ளது .


ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் திடீர் ஏற்பட்ட  கடும் குளிர் கால நிலையால் 114 ஆடுகள் மொத்தமாக  இறந்துள்ளன. 686 பசு மாடுகளும்,58 எருமை மாடுகளுமாக பல இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது.



3. கால் நடைகளை இழந்தவர்களுக்கான அரசாங்கத்தினால் ஏதாவது நஷ்ட ஈடுகள் வழங்கப்படுமா ??அதற்கான முன்னெடுப்புக்கள் ஏதும் உண்டா???


இழப்பீடு சம்மந்தமாக விவசாய அமைச்சின் செயலாளருக்கு கால் நடைகளின் இறப்பு தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம். நஷ்ட ஈட்டினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சாதகமான தீர்வு கிட்டும் என நம்புகிறேன்.இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரும்பாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். இதற்காக தன்னாலான சிபாரிசுகளை முன்வைத்துள்ளதோடு பெரும்பாலும் அவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படலாம்.



4.கால் நடைகளை பாதுகாக்கவும் பன்னையாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் ஏதாவது புதிய திட்டங்கள் உண்டா??


திறந்த வெளியில் கால் நடைகளை வளர்ப்பதால் தான் பாரிய இயற்கை இடர்களை கால் நடை வளர்ப்பாளர்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.இது மட்டுமல்ல 2012ல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல கால் நடைகள் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளன இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க திறந்தவெளியில் இருந்து உள்ளக முறைகளை பன்னை வளர்ப்பாளர்களுக்கு வசதிப்படுத்தவும் புல் வளர்ப்பு, கொட்டில் அமைப்பு முறையியல் மூலமாக கால் நடைகளின் உற்பத்தி திறன்களை அதிகரிக்கவும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். 


ஒட்டு மொத்தமாக கால் நடை வளர்ப்பாளர்கள் பல நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் மாடறுப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான அறிவித்தலை மாகாண ஆளுனர் அறிவித்துள்ளதுடன் கால் நடை உயிரிழப்புக்கள் தொடர்பில் ஏற்கனவே அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் உரிய திணைக்கள பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கடும் குளிர் கால நிலை தொடர்பில், கால் நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் அறிக்கை அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கடும் குளிர் கால நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன.திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களில் பன்னை வளர்ப்பாளர்களின் ஆடு,மாடு இறந்துள்ளதால்   கால் நடை வளர்ப்பாளர்கள் பல நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.ஏ.மொஹமட் பாஸி உடனான நேர்காணல் பின்வருமாறு"கால் நடைகளின் இறப்புக்கு குளிரின் அதிர்ச்சியே காரணம் "பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியீடு01.கிழக்கு மாகாணத்தில் அண்மையில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன இது தொடர்பில் இறப்பிற்கான காரணங்கள் என்னகடந்த 8ம் திகதி ஏற்பட்ட கடும் குளிருடனான கால நிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியினால் கிழக்கு மாகாணத்தில் 30 பாகை வெப்ப நிலை இருந்த போது அது ஆறு மணியாகும் போது  படிப்படியாக 20 பாகையாக குறைந்தமையினால் இரவு 11 மணிக்கு பிற்பாடு 17 ஆக குறைவாகியது இதன் தாக்கம் கால் நடைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது . தற்போதைய நிலையில் பண்ணையாளர்கள் மாடுகளை காடுகளில் திறந்தவெளியில் வளர்த்து வந்தார்கள் ஏன் எனில் வேளாண்மை, பயிர்ச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் திறந்த வெளியில் வைத்தே பராமரித்தார்கள் இதனால் திடீர் குளிருடன் நிலவிய காலநிலை ஏற்பட்டு கால் நடைகளான பசு மாடுகள்,எருமை மாடுகள்,ஆடுகள் என  பல இறந்துள்ளன.இதன்படி கிழக்கு மாகாணத்தை  பொறுத்தமட்டில் திறந்த வெளியில் மாடுகளை வளர்த்து வந்த கால் நடை வளர்ப்பாளர்கள் கடும் குளிரின் தாக்கம்  காரணமாக மாடுகள் இறந்திருக்கலாம் என உடனடியாக தீர்மானிக்காமல் எமது கால் நடை உற்பத்தி திணைக்கள புலனாய்வாளர்களை அழைத்து பிரேத பரிசோதனையின் அறிக்கைக்காக அதன் மாதிரிகளை  பேராதெனிய கால் நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது .குறித்த அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றிருக்கிறது அதில் "கடும் குளிரின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் " கால் நடைகளின் இறப்புக்கு காரணமாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மாடுகளை திறந்து வெளியில் இன்றி உள்ளக வளர்ப்பு முறைகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய உத்திகளை கையாண்டு அதனை பாதுகாக்க முடியும்.2.கிழக்கில் கால் நடை இறப்புக்களின் தொகையை மாவட்ட அடிப்படையில் எடுத்துக் கூற முடியுமாகால் நடை இறப்பு தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் 425 பசு மாடுகளும்,36 எருமை மாடுகள்,71 ஆடுகள் இறந்துள்ளன. இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 252 பசு மாடுகளும் 19 எருமை மாடுகளும் 38 ஆடுகளும் இறந்துள்ளன, அம்பாறை மாவட்டத்தில் குறைவான இறப்புக்களே ஏற்பட்டுள்ளன 9பசு மாடுகளும், 3 எருமை மாடுகளும் 5 ஆடுகளுமாக இறந்துள்ளது .ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் திடீர் ஏற்பட்ட  கடும் குளிர் கால நிலையால் 114 ஆடுகள் மொத்தமாக  இறந்துள்ளன. 686 பசு மாடுகளும்,58 எருமை மாடுகளுமாக பல இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது.3. கால் நடைகளை இழந்தவர்களுக்கான அரசாங்கத்தினால் ஏதாவது நஷ்ட ஈடுகள் வழங்கப்படுமா அதற்கான முன்னெடுப்புக்கள் ஏதும் உண்டாஇழப்பீடு சம்மந்தமாக விவசாய அமைச்சின் செயலாளருக்கு கால் நடைகளின் இறப்பு தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம். நஷ்ட ஈட்டினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சாதகமான தீர்வு கிட்டும் என நம்புகிறேன்.இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரும்பாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். இதற்காக தன்னாலான சிபாரிசுகளை முன்வைத்துள்ளதோடு பெரும்பாலும் அவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படலாம்.4.கால் நடைகளை பாதுகாக்கவும் பன்னையாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் ஏதாவது புதிய திட்டங்கள் உண்டாதிறந்த வெளியில் கால் நடைகளை வளர்ப்பதால் தான் பாரிய இயற்கை இடர்களை கால் நடை வளர்ப்பாளர்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.இது மட்டுமல்ல 2012ல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல கால் நடைகள் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளன இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க திறந்தவெளியில் இருந்து உள்ளக முறைகளை பன்னை வளர்ப்பாளர்களுக்கு வசதிப்படுத்தவும் புல் வளர்ப்பு, கொட்டில் அமைப்பு முறையியல் மூலமாக கால் நடைகளின் உற்பத்தி திறன்களை அதிகரிக்கவும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஒட்டு மொத்தமாக கால் நடை வளர்ப்பாளர்கள் பல நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் மாடறுப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான அறிவித்தலை மாகாண ஆளுனர் அறிவித்துள்ளதுடன் கால் நடை உயிரிழப்புக்கள் தொடர்பில் ஏற்கனவே அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் உரிய திணைக்கள பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement