கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த விபரீதம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரததி மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது.

இதன்போது கட்டட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது.

இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ள நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை