கொவிட் தொற்றுக்கு எதிராக புதிய வடிவ மருந்து கண்டுபிடிப்பு

287

கொவிட்டுக்கு எதிராக Nasal Spray என்ற பெயரில் புதிய வகையிலான மருந்து ஒன்றை அவுஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் பரிசீலித்து வருகின்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மருந்தை ஒருவரின் மூக்கில் ஸ்பிரே செய்யும் போது அவர்களுக்கு கொவிட் தொற்று இருந்தால் அதிலிருந்து பாதுகாக்கின்றது என பேராசிரியர் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

இது மூக்கினால் சுவாசிக்கக் கூடியவாறு Inhaler ஆகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களாக தான் இதனை பயன்படுத்தி வருவதாகவும், தனக்கு இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பரிசோதனைகள் வெற்றியளித்தால் கொவிட்டுக்கு எதிராக ஊசி மருந்தாக வேறு வகையில் பயன்படுத்தப்படலாம் எனவும், கொவிட் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் இம் மருந்து தொற்று பரவாமலிருக்க மாஸ்க்காகவும் பயன்படுத்தப்படலாம் எனவும், மக்கள் கூடும் இடங்களிலும் இம் மருந்தை பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் விக்டோரியா அரசாங்கம் வருகின்ற மாசி மாதம் கொவிட் பாதிப்பிற்குள்ளான 400 பேருக்கு இப் புதிய மருந்தை பரீட்சித்துப் பார்க்கும் நோக்குடன் 4.2 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது