கொழும்பில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கிவைப்பு!(படங்கள் இணைப்பு)

வடகொழும்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தலைமையிலும், IDM Nations Campus International கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இந்த தருணத்தினை அடிப்படையாக கொண்டு மக்களின் ஜீவனோபாய சுமையயை குறைக்கும் வகையில் இவ்வாறு உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாக ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னரும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல பகுதிகளில் வசிக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்.

“நாட்டில் ஏற்பட்டிருக்ககூடிய இந்த அசாதாரண சூழ்நிலையில், மக்கள் இன்று சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கால கட்டத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாங்கத்திற்கான கால அவகாசம் தேவைப்படுவதாக அறியப்படுகின்றது. அதே சந்தரப்ப்பத்தில் இன்றிருக்ககூடிய மக்களை பொருத்த வகையில், பாராளுமன்றத்தில் இருக்ககூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்குரிய வரப்பிரசாதங்களையும், அவர்களுக்கான தேவைகளையும், பாராளுமன்றத்தில் இன்றைய புதிய தலைவர் மூலம், பெற்று அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் எதிர்கால பிரச்சினைகளுக்கான தீர்வகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் சாதாரண மக்களை பொறுத்த வகையில் இன்று பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள். நேரடியாக உணவு உட்பட அடிப்படை வசதிகளில் அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. நேற்று இந்த நாட்டின’ தலைவர் குறிப்பிடும்போது இன்னும் ஆறு மாதங்களுக்கு மிகவும் சொல்லொனா துன்பங்களை இந்த மக்கள் படப்போகிறார்கள் என்ற செய்தியை குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆகவே இது ஆறு மாதமா அல்லது ஒரு வருடமா அல்லது இரண்டு வருடங்களா என்று தெரியவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் இன்று பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகளவில் பாதிப்பினை அடைந்திருக்கிறார்கள்.

நாட்டில் பல சமூக சீர்கேடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன துர் மரணங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன அதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் இவ்வாறான குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அடிப்படை தேவைகளைகூட அவர்களால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். இதனால்தான் எமது அறக்கட்டளையின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மிக முக்கியமாக இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஒவ்வொரு பிரதேசமாக வழங்கி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் இன்று கொழும்பு வடக்குப் பிரதேசத்தில் 150 குடும்பங்களை தெரிவுசெய்து அவர்களுக்கான அத்தியாவசிய உணுவுப்பொருட்களை வழங்கினோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வரப்பிரசாதங்களையும் தங்களுடைய பிரச்pனைகளுக்கும் தீர்வுகளை இன்று சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பதன் ஊடாகவும் ஜனாதிபதிக்கு ஆரரவு கொடுப்பதன் ஊடாகவும் தங்களுக்கு தேவையானவற்றை இவர்கள் செய்யும்போது, இந்த மக்களுக்கான தேவைகளை மக்களாகிய நாங்களும் செய்யவேண்டிய சூழ்நிலையில் மாட்டப்பட்டிருக்கிறோம்.

ஆகவே தலைவர்கள் ஒன்றுசேர்ந்து சிந்திக்க வேண்டும் அவர்களுடைய பிரச்சினைகளட தீர்க்கப்படும்பொழுது, எங்களுடைய மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் வகையில், மக்களின’ அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் வகையில் அவர்களின் செயற்றிட்டங்கள் இனிவரும் காலங்களில் அமைய வேண்டும்.

வெருமனே எதிர்வரும் காலங்களில் பிரச்சினைகள் இருக்கும் என்ற சொல்லிக் கொண்டிருப்பதைவிட இந்தப் பிரச்சினைகளுககு மக்களை பொருத்தவரையில் தலைவர்களே தீர்வு காண வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளை அவர்கள் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை தலைமைத்துவத்தில் வைத்திருக்கிறோம். பிரச்சினைகள் இருக்கின்றன என்று கூறுவது ஒரு தலைமைத்துவத்துக்கு அழகில்லை.

ஆகவே தலைவர்கள் இந்த மக்களுக்கான அத்தியாவசிய பிரச்சினைகளுக்காவது தலைவர்கள் தீர்வினை வழங்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் மக்கள் மக்களுடன் மக்களாக ஒன்றிணைய வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது வேலைத்திட்டங்களும் அமையும்” என தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை