Wednesday, May 18, 2022

கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(14) மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதான சந்தைக்கு முன்பாக நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளினை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியினை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

வடகிழக்கில் பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடியில் பொதுமக்கள் இணைந்து இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்தனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

அத்துடன், மட்டக்களப்பு புணாணை மைலந்தன்னை பிரதேசத்தின் கொழும்பு பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கிழக்கில் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் முள்ளிவாய்க்கால் பேரவல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்ற படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் தொடர்பில் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை