உணவுப் போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த குழு கூட்டம்!

மாவட்டத்திலிருக்கக்கூடிய எந்தவொரு குடிமகனும் உணவில்லாமல் அதேபோன்று எந்தவொரு பிள்ளையும் போஷாக்கின்மையால் வாடக்கூடிய ஒரு நிலவரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார்.


 ஜனாதிபதியுடைய வழிகாட்டலின் கீழ் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷக்கின்மை ஒழித்தல் தொடர்பான 07 குழுக்கள் தேசிய ரீதியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் உணவுப் போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த குழு இன்று (22)திருகோணமலை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.


கிராமிய ரீதியாக உருவாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான குழு கிராமத்திலே உணவின்றி இருப்பவர்களது தகவல்கள்  மற்றும் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது தகவல்களை கிரமமான முறையில் சேகரித்து அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறானவர்கள் அற்ற ஒரு பிரதேசதத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அக் குழுக்களையே சாரும்.

எனவே அதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கவேண்டிய தேவை அந்தக் குழுக்களுக்கு காணப்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெளிவு படுத்தினார்.
எதிர்வருகின்ற வாரத்தில் மாவட்டத்தில் போஷக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சிறுவர்கள் மற்றும் உணவின்றி தவிக்கக் கூடிய குடும்பங்களுடைய விபரங்கள் சேகரிக் கப்படவுள்ளன.

இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு உரிய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் உரிய செயற்பாடுகளை கிராமிய மற்றும் பிரதேச செயலக குழுக்களும் ஏனைய பங்குதாரர்களை இணைத்து செயற்படல் வேண்டும்.

அந்தடிப்படையில் அரச நிறுவனங்கள், தொடர்புப்பட்ட ஏனைய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என்பன இணைந்து இந்தப் பொறிமுறையை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது அரசாங்க அதிபர் எடுத்துரைத்தார்.


இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) எஸ். சுதாகரன், மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.விஜயதாசன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை