ஆட்சியை பிடித்த அடுத்த நாளே அடாவடியில் இறங்கிய திமுக-வினர்; பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

405

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பதிவிட்டு வந்தன.

இந்தநிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார் மேலும், உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆட்சியை பிடித்த அடுத்த நாளே திமுக-வினர் அடாவடியில் ஈடுபட தொடங்கிவிட்டனர் என பல கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: