“வெளியில் செல்ல வேண்டாம்; உங்கள் பயண முடிவு அதுவாகவும் இருக்கலாம்” என்பதை உணர்த்தும் “LOCK”!

175

திரைத்துறை சார் படைப்புகளை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும்
“லொக்” எனும் குறும்படம் அனாவசிய தேவைக்கு வெளியில் செல்ல வேண்டாம்.
உங்கள் பயண முடிவு அதுவாகவும் இருக்கலாம் “என்ற எண்ணக்கருவில் பூவரசி மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ளது .

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் ஈழத்து கலைஞர்கள் பலவிதமான படைப்புகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அதேபோன்று கொரோனா வைரசிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்புகளையும் தந்துகொண்டிருக்கிறார்கள்.

ஹருஷன் இயக்கத்தில் Sp1இசையில் , பிராட்லியின் ஒளிப்பதிவில் கிருஷ்ணிக்காவின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த குறும்படத்திற்கு கலை இயக்குராக பிரணவனும் எடிட்டர் ஆக ஜீடான்னும் பணியாற்றி உள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் வெளிவர இருக்கும் இந்த குறும்படத்திற்கு எமது ஆதரவினையும் வழங்கி ஈழத்துக் கலைஞர்களை ஊக்குவிப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: