சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயங்கவேண்டாம்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

275

கொரோனாத் தடுப்பூசியை சிறுவர்களுக்கு வழங்குவதற்கு தயங்க வேண்டாம் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் பத்மா குணரத்ன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகின் பெரும்பாலான நாடுகளில், பெருமளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் சாதக மற்றும் பாதுகாப்புத் தன்மை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னரே இலங்கை அந்த தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றது.

பெற்றோர்கள் என்ற அடிப்படையில், பிள்ளைகளை தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படுத்த முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: