அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்காதீர்- அஜித் ராஜபக்ஷ கோரிக்கை!

ஒவ்வொரு விடயத்தையும் எதிர்ப்பது எதிர்க்கட்சியின் பொறுப்பாக இருக்கக் கூடாது எனவும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி சாதகமான பதிலை வழங்குவது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய சபைக்கு ஆதரவளிக்காமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சிகள் எதை எதிர்பார்க்கின்றன என கேள்வி எழுப்பிய பிரதி சபாநாயகர், நாட்டின் பொது மக்களும் அரசாங்கத்தின் பொறுப்பை நன்கு உணர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை