மறு அறிவித்தல் வரை எரிவாயு சிலிண்டர்களுக்காகக் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி இன்று எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காணப்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, எரிவாயு விநியோகம் தாமதமடையும் எனவும், மறு அறிவித்தல் வரை வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு அடங்கிய மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
இதன்படி, 3 ஆயிரத்து 700 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் வருகை தந்த கப்பலுக்கும், இன்று வரவுள்ள கப்பலுக்கும் ஏற்கனவே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்