நயன்தாராவின் தலை முடியை சரி செய்யிறவர்களுக்கு எத்தனை லட்ஷம் சம்பளம் தெரியுமா?

331

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா, இவர் ஒரு படத்திலிருந்தாலே படம் பாதி வெற்றியடைந்து விட்டது என்ற முடிவிற்கு கோடம்பாக்கம் வந்து விடும்.

நிலைமை இப்படியிருக்க சென்னையில் சமீபத்தில் வெட்டி பசங்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் பாம்பேவில் இருந்து மேக்கப், சிகை அலங்காரம் என 5,6 உதவியாளர்களை விமானத்தில் வரவைத்துக்கொள்கிறார்கள்.

ஏன் இங்கு கலைஞர்கள் இல்லையா, அவர்கள் தலைமுடி தங்கத்திலா உள்ளது. தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.

அவங்களுக்கு ஒரு நாள் செலவு ஒரு லட்சம் என்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 50 லட்சம் ரூபாய் அதுக்கே போய்விடும்.

யாரையும் குறை கூறவில்லை, இதுபோன்ற செலவை மிச்சப்படுத்தினால் தயாரிப்பாளர் நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம் என பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: