ஒரு எபிசோடுக்கு குக்குக்கும் கோமாளிகளுக்கும் எவ்வளவோ சம்பளம் தெரியுமா ? இவங்களுக்கு தான் அதிகமா..!

360

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ரசிகர் மத்தியில் ஹிட் ஆக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

மேலும் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

அத்தோடு அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. மேலும் இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர்.

எனினும் அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார் போல சம்பளமும் வழங்கப்படும் என்று தான் கூறவேண்டும்.மேலும் அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள நபர்களில் யார் யார் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இந்த சம்பளம் ஒரு எபிசோடுக்கு மட்டும் என்ற கணக்கில்….

ஷகிலா – 50ஆயிரம் ரூபாய்
பாபா பாஸ்கர், மதுரை முத்து – 40 ஆயிரம்ரூபாய்
அஷ்வின் – 25 ஆயிரம் ரூபாய்
மணிமேகலை, சுனிதா, ஷிவாங்கி – 20ஆயிரம் ரூபாய்
பாலா,புகழ் – 15ஆயிரம் ரூபாய்
தர்ஷா, பவித்ரா, தீபா – 10ஆயிரம் ரூபாய்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: