• Apr 18 2024

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா....?

Tamil nila / Dec 19th 2022, 2:28 pm
image

Advertisement

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.


ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதயாகும். அதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.


கர்ப்பக் காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.


கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில் கர்ப்பத்தின்போது மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்ட தாய்மாரின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.


மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கல்சியம், பொட்டாசியம் மற்றும் விற்றமின் “டி” உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.


மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களில் முக்கியமானது தான் ‘கோலைன்’ சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள விற்றமின் ”டி” அறிவுத்திறனை அதிகரிக்கும்.


விற்றமின் ”பி” மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.


பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா. குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதயாகும். அதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.கர்ப்பக் காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில் கர்ப்பத்தின்போது மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்ட தாய்மாரின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கல்சியம், பொட்டாசியம் மற்றும் விற்றமின் “டி” உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களில் முக்கியமானது தான் ‘கோலைன்’ சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள விற்றமின் ”டி” அறிவுத்திறனை அதிகரிக்கும்.விற்றமின் ”பி” மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

Advertisement

Advertisement

Advertisement