டெல்டா வகை கொரோனா எப்படி இருக்கும் தெரியுமா? முதன் முதலில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்

398

டெல்டா வகை கொரோனா தொற்றின் புகைப்படங்கள் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாளடைவில் கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று புதிது புதிதாக உருவாகி உலக நாடுகளையே அச்சுறுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக உலகளவில் குறைந்து வந்த தொற்று, தற்போது குறைந்த தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா மாறுபாடுகளில் ஒன்றான டெல்டாவின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் தெரியும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெக்டர் அறிவியல் மையத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, டெல்டா வைரஸின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறைய என்பது குறிப்பிடத்தக்கது.