• Apr 20 2024

வாரத்தில் 30 நிமிடங்கள் செல்போனில் பேசுபவரா நீங்கள்..? - காத்திருக்கும் பேராபத்து! samugammedia

Chithra / May 8th 2023, 7:55 am
image

Advertisement

வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆராய்ச்சியை, சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது.


இந்த ஆய்வில், 37 முதல் 73 வயதுக்குட்பட்ட உயர் இரத்த அழுத்தம் இல்லாத 2,12,000 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்களைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்காணித்ததாகவும், அதன்பேரிலேயே இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களைப் பரிசோதித்தபோது, 7 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் , வாரத்தில் அரை மணி நேரம் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் 12 சதவீதமும், 30-59 நிமிடம் பேசுபவர்களுக்கு 13 சதவீதமும், 1-3 மணி நேரம் பேசுபவர்களுக்கு 16 சதவீதமும் உயர் இரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


உலகளவில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் செல்போன் வைத்துள்ளனர். இந்த கருவிகள் குறைந்த அளவிலான ரேடியோ அலைவரிசை ஆற்றலை வெளியிடுகின்றன. 

இவைகளை நீண்டநேரம் வெளிப்படுத்தினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

வாரத்தில் 30 நிமிடங்கள் செல்போனில் பேசுபவரா நீங்கள். - காத்திருக்கும் பேராபத்து samugammedia வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஆராய்ச்சியை, சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது.இந்த ஆய்வில், 37 முதல் 73 வயதுக்குட்பட்ட உயர் இரத்த அழுத்தம் இல்லாத 2,12,000 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்களைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்காணித்ததாகவும், அதன்பேரிலேயே இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.12 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களைப் பரிசோதித்தபோது, 7 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் , வாரத்தில் அரை மணி நேரம் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் 12 சதவீதமும், 30-59 நிமிடம் பேசுபவர்களுக்கு 13 சதவீதமும், 1-3 மணி நேரம் பேசுபவர்களுக்கு 16 சதவீதமும் உயர் இரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகளவில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் செல்போன் வைத்துள்ளனர். இந்த கருவிகள் குறைந்த அளவிலான ரேடியோ அலைவரிசை ஆற்றலை வெளியிடுகின்றன. இவைகளை நீண்டநேரம் வெளிப்படுத்தினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement