அறுபட்ட தலையை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இச்சம்பவம், இஸ்ரேலில் பதிவாகியுள்ளது.
அங்கு, 12 வயதான சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வேளை அவனை, கார் மோதியுள்ளது.
அதில், சுலைமான் ஹசனின் தலை 90 சதவீதம் துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அந்த விபத்தில், சிறுவனின் கழுத்து பகுதியில் தசை நார்கள் கிழிந்து மண்டை ஓடு முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்து பிரிந்துள்ளது.
இதையடுத்து, வைத்தியர்கள் தமது திறமையாலும், தொழிநுட்பங்களின் உதவியாலும் சத்திர சிகிச்சை செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஓஹத் எய்னவ் கூறுகையில், பல மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் சிறுவனின் தலையை உடலோடு பொருத்த பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவன் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருந்த போதிலும் மருத்துவ குழுவின் தீவிர முயற்சியால்அந்த சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.
ஆயினும், சிறுவனின் உடல் நலனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அறுபட்ட தலையை மீண்டும் பொருத்தி வைத்தியர்கள் சாதனை.உயிர் பிழைத்த சிறுவன்…samugammedia அறுபட்ட தலையை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இச்சம்பவம், இஸ்ரேலில் பதிவாகியுள்ளது.அங்கு, 12 வயதான சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வேளை அவனை, கார் மோதியுள்ளது. அதில், சுலைமான் ஹசனின் தலை 90 சதவீதம் துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அந்த விபத்தில், சிறுவனின் கழுத்து பகுதியில் தசை நார்கள் கிழிந்து மண்டை ஓடு முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்து பிரிந்துள்ளது.இதையடுத்து, வைத்தியர்கள் தமது திறமையாலும், தொழிநுட்பங்களின் உதவியாலும் சத்திர சிகிச்சை செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஓஹத் எய்னவ் கூறுகையில், பல மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் சிறுவனின் தலையை உடலோடு பொருத்த பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுவன் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருந்த போதிலும் மருத்துவ குழுவின் தீவிர முயற்சியால்அந்த சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளான். ஆயினும், சிறுவனின் உடல் நலனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது