• Mar 29 2024

பணிப்புறக்கணிப்பில் குதித்த வைத்தியர்கள்! SamugamMedia

Chithra / Mar 13th 2023, 8:05 am
image

Advertisement

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க ஊழியர்களின் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 15 ஆம் திகதி வடமேற்கு, வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்தின் போது அவசர சிகிச்சை சேவைகள் தொடரும் எனவும், சிறுவர், மகப்பேறு, புற்றுநோய், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தங்களுக்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் குதித்த வைத்தியர்கள் SamugamMedia எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க ஊழியர்களின் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் 15 ஆம் திகதி வடமேற்கு, வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.இந்த வேலை நிறுத்தத்தின் போது அவசர சிகிச்சை சேவைகள் தொடரும் எனவும், சிறுவர், மகப்பேறு, புற்றுநோய், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தங்களுக்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement