நாக்கு அடிக்கடி வறண்டு போகுதா?

710

நம்முடைய உடலில் வெளி உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடலில் தேவையையோ அல்லது பிரச்னையையோ நமக்குத் தெரியப் படுத்துவதற்கான அறிகுறிகளாகத் தான் பார்க்க வேண்டும்.

நாக்கு வறட்சி என்பது நாம் பயந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தீவிர நோயின் அறிகுறி எதுவுமில்லை. நாக்கு வறட்சி அடைவது என்பது இயல்பான நிகழ்வு தான். நாக்கு வறட்சி நம்முடைய உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் குடிப்பதில்லை என்பதையும் வேர்வை நிறைய வெளியேறுகிறது.

அந்த தண்ணீர் தேவையை ஈடு செய்ய வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகிறது. அதிக அளவில் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு நாக்கு உலர்ந்து வறட்சியடையும்.

இரவில் தூங்கும்போது மூக்கு அடைப்பு ஏற்பட்டு, வாயைத் திறந்து, வாய்வழியே மூச்சு விடுபவர்களுக்கும் நாக்கு வறட்சி உண்டாகும். புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி நா வறட்சி ஏற்படும்.

தூங்கும்போதும் படுக்கைக்கு அருகில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குங்கள். ஆல்கஹால் இல்லாத மௌத்வாஷ் பயன்படுத்துங்கள். வாய் வறட்சியால் பல் வலி கூட வரக்கூடும்.

அதிகமாக ஆல்கஹால், காபி, டீ மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்கள் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். அமிலத் தன்மை வாய்ந்த பழங்கள் (எலுமிச்சை), காரம், உப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அளவுக்கு அதிகமாக நாக்கு வறண்டு போகும்போது, பேசுவதற்கு, மென்று சாப்பிட, உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்