‘இனியும் தாமதிக்க வேண்டாம்’ மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்!

125

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் கடந்த 10ம் திகதி நிறைவேற்றியது.

இந்த நிலையில், பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் தமிழ் மற்றும் சிறுபான்மை மக்களை ஒடுக்குவதை நிறுத்தாவிட்டால் GSP+ சலுகை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் வருகிறது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நம் நாட்டுக்கு பலகோடி ஏற்றுமதி வருமானம் அதோ கதி ஆகிறது. பல ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள். டொலர் விலை எகிறும்.

ஆகவே, “தாய்நாட்டு பற்றுடன், ஐரோப்பிய யூனியனிடம் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்ற மனுவை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கதவுகளை யாரும் தட்டாதீர்கள்.

“இனியும் தாமதிக்க வேண்டாம். இதுவே லேட். எடுத்த முடிவை வெகு சீக்கிரம் அமுல் செய்யுங்கள். இதுதான் இவன்களுக்கு புரியும் பாஷை” என்ற மனுவை, ஐரோப்பிய யூனியனுக்கு நாம் ஏற்கனவே அனுப்பியாச்சு.! என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: