‘பெருமையாக இருக்குதடா’- டான் பட இயக்குநரை பாராட்டிய அட்லி- குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியது.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்தை இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இன்று ரிலீஸ் ஆன இத் திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய உதவியாளர் இயக்கியுள்ள திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “உணர்வுப்பூர்வமான குடும்ப சித்திரம். நன்றி சிவகார்த்திகேயன் .

ஒரு புதுமுக இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்ததற்கு சிபி சக்ரவர்த்தி- டைரக்டர் சார். பெருமையாக இருக்குடா. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை